திடீரென குலுங்கிய வீடுகள்!! பீதியில் அலறி ஓடிய மக்கள்!!

0
82
Houses suddenly shook!! People ran screaming in panic!
Houses suddenly shook!! People ran screaming in panic!

குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மோசானா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் வந்துள்ளது. அதன் விளைவாக அங்குள்ள வீடுகள் எல்லாம் அதிர்ந்து, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கீழே விழுந்துள்ளன. அதை உணர்ந்த மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளார்கள்.

அந்த சம்பவம் இரவு 10.15 மணியளவில்  சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பூமி அதிர்ந்துள்ளது. அந்த அதிர்வு தொடர்பான விவரங்களை காந்தி நகரில் உள்ள நில அதிர்வு ஆய்வு மையம் ஆய்வு செய்ததில் அது நிலநடுக்கம் என உறுதி செய்துள்ளனர். நிலநடுக்கம் என்பது லித்தோஸ்பியரில் திடீரென ஆற்றலை வெளியிடுவதன் விளைவாக நில அதிர்வு அலைகளை உருவாக்கும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நடுக்கம் ஆகும்.

அந்த நிலநடுக்கத்தில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என காந்தி நகர் ஆய்வு மையம் முதல் கட்ட விசாரணையில் அறிவித்துள்ளது. இந்த நிலையில் குஜராத் கட்ச் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் 19,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் அதில் 50,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதனால் இந்த நிலநடுக்கத்தை பார்த்து மக்கள் பெரிதும் பயத்தில் இருந்தார்கள்.

Previous articleஅனைத்து வசதிகள் கூடிய டாஸ்மாக்!! ஆனந்த வெள்ளத்தில் குடிமகன்கள்!!
Next articleமீண்டும்  திருவள்ளுவருக்கு காவி உடை!! ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  சர்ச்சை!!