இல்லத்தரசிகளே.. இதுவரை யாரும் சொல்லாத 10 பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக!!

Photo of author

By Divya

நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமையலை சிறப்பாக்கிவிடும்.அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு பயன்படும் 10 சமையல் குறிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1)வீட்டில் அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அதன் கீற்று போட்டு கல் உப்பு தடவி பதப்படுத்தினால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

2)ரவா தோசைக்கு மாவில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை மொருமொருவென்று கிடைக்கும்.

3)மிளகாய் வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிது கல் உப்பு சேர்க்கலாம்.தோசை மாவில் சிறிதளவு ரவை சேர்த்தால் தோசை வார்க்கும் போது சிவந்து வரும்.

4)முட்டை ஓடு வெடிக்காமல் வெந்து வர தண்ணீரில் சிறிது வெங்காயத் தோல் சேர்க்கலாம்.

5)தக்காளி சீக்கிரம் வதங்கி வர சிறிது கல் உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கலாம்.உளுந்து மாவில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்தால் எண்ணெய் குடிக்காத மொரு மொரு வடை கிடைக்கும்.

6)முட்டை கெட்டுப்போகாமல் இருக்க அதன் முக்கோண பகுதியை கீழ் நோக்கி இருக்கும்படி ஸ்டோர் செய்து வைக்கலாம்.

7)உப்பு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் இருக்க அதில் சிறிது பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம்.

8)வெங்காய பகோடா செய்யும் மாவில் இரண்டு தேக்கரண்டி வறுத்த நிலக்கடலை மாவு சேர்த்தால் மொருமொருன்னு வரும்.

9)கேசரி,பால்கோவா,ஹல்வா போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக் பாத்திரத்தத்தில் செய்தால் அடிபிடிக்காமல் இருக்கும்.

10)பாயாசத்திற்கு உலர் திராட்சைக்கு பதில் பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.பாகற்காய் கசப்பு நீங்க புளியில் வேக வைத்து சமைக்கலாம்.