இல்லத்தரசிகளே.. வெறும் 580 ரூபாய்க்கு எடை குறைவான ஸ்மார்ட் சிலிண்டர்!! இதில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!
நாட்டில் எரிவாயு அடுப்பின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.விறகிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட எரிவாயு இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில்,பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் சமையல் எரிவாயுவை விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இண்டேன் நிறுவனம் புதியவகை சமையல் எரிவாயுவை அறிமுகம் செய்தது.ஆனால் ஆரம்பத்தில் மக்களிடையே இதற்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.காரணம் இதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்பது தான்.
விலை குறைவு,வெளியில் எடுத்து செல்வதற்கு ஏதுவாக இருக்கின்ற காரணத்தினால் பயனர்களிடையே வரவேற்பை பெறத் தொடங்கியது.வெறும் 5 மற்றும் 10 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த காம்போசிட் சிலிண்டர்(ஸ்மார்ட் சிலிண்டர்) மிகவும் பாதுகாப்பானது.
காம்போசிட் சிலிண்டரின் அம்மசங்கள்:-
*மலிவு விலை
*துருப்பிடிக்காது
*குறைவான எடை
*பாதுகாப்பானது
*பாலிஎத்திலினால் செய்யப்பட்ட உள்ளுறை
*சிலிண்டரில் இருக்கின்ற எரிவாயு அளவை மொபைல் டார்ச் மூலம் எளிதில் கண்டறிதல்
பெருமபாலான பயனர்கள் இன்றுவரை அதிக எடை கொண்ட இரும்பு கேஸ் சிலிண்டர்களை தான் உபயோகித்து வருகின்றனர்.இந்த சிலிண்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒருவரின் உதவி தேவைப்படுகிறது.அதிக எடை கொண்ட கேஸ் சிலிண்டரை தூக்குவது என்பது பெண்கள்,முதியவர்களுக்கு மிகவும் சிரமமான விஷயம்.
ஆகையால் தான் இண்டேன் நிறுவனம் எடை குறைவான காம்போசிட் சிலிண்டரை அறிமுகம் செய்திருக்கிறது.
காம்போசிட் சிலிண்டர் பெறுவது எப்படி?
இண்டேன் சமையல் எரிவாயு பயனர்கள் தங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யக் கூடிய ஏஜென்சியில் கூடுதல் கட்டணம் செலுத்தி காம்போசிட் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளுங்கள்.இந்த கேஸ் சிலிண்டரின் விலை வெறும் ரூ.580 மட்டுமே.