இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை! பவுனுக்கு ரூ 440 அதிகரித்து விற்பனை!
கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறவும் தொடர்ந்து இறங்கவும் என்ற அடிப்படையில் இருக்கின்றது.
பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. மேலும் கடந்த ஆறாம் தேதி சவரன் 42 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு மறுநாள் சவரன் 41800 ஆக குறைந்தது. மேலும் எட்டாம் தேதி சவரன் 41,320 ஆகவும் ஒன்பதாம் தேதி 41,240 ஆகவும் குறைந்தது. அதனை தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. பவுன் ரூ 41,520 ஆக உயர்ந்தது நேற்று முன்தினம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டி 42,160க்கும் விற்கப்பட்டது.
நேற்று அதே விலையே நீடித்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு 440 அதிகரித்து 42,600 விற்கப்படுகின்றது. கடந்து இரண்டு நாட்களில் மட்டும் பவுனுக்கு 1௦80 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரு கிராம் தங்கம் 5270க்கும் விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ. 5325 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ 68.70க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து 69.50-க்கும் விற்கப்படுகின்றது ஒரு கிலோ பார் வெள்ளி 69 ஆயிரத்து 500க்கும் விற்பனையாகின்றது.