10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை!

0
244
#image_title

10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை.

மகாராஷ்டிரா மாநிலம் புனையில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பங்கு பெற்ற இசைக்கச்சேரிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரின் இசை கச்சேரியை காண்பதற்கு ஏராளமான அவரது ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

புனே காவல்துறையை சார்ந்த ஏராளமான மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அந்த இசைக் கச்சேரியில் அங்கே பங்கேற்று இருந்தனர்.இந்த நிலையில் இரவு 10 மணி தாண்டியும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் உள்ளே நுழைந்த புனே காவல்துறை அவரது இசைக் கச்சேரியை பாதியிலேயே தடுத்து நிறுத்தியது.

ஏ ஆர் ரகுமானை பார்த்து பத்து மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும் என காவல்துறை கேள்வி எழுப்பியதை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் மேடையின் பின்பக்க வழியாக வெளியேறி சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக ஏ ஆர் ரகுமானின் மீது புனே காவல்துறை நடவடிக்கை எடுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமதிமுக தனி நபர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக போராடும் இயக்கம் அல்ல!! தமிழக நலனுக்காக பாடுபடும் இயக்கம்!
Next articleஇரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது – திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!