தினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!

Photo of author

By Sakthi

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று திமுக முழுமூச்சாக இறங்கி வருகின்றது. அந்த விதத்தில் அந்த கட்சியை பல்வேறு வியூகங்களை அமைத்து இருக்கிறது.அதேசமயத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் திமுகவிற்கு சற்றும் சளைக்காமல் பல்வேறு வியூகங்களை அமைத்து போட்டியிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது அரசியல் நிலவரத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றதாக இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் தான் தற்சமயம் டிடிவி தினகரன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இந்த கட்சியின் கூட்டணி காரணமாக, வெற்றி வாய்ப்பு அருகில் வந்தாலும் கூட அதை தொட முடியாத நிலை உருவானது என்று தான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு இருக்கின்றார்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் டிடிவி தினகரன் தன்னை பெரிய ஆளுமையாக தமிழகத்தில் காத்துக்கொள்ள முயற்சி செய்தாலும் அவரை முக்கிய கட்சிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை தன்னை உதாசீனப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவே டிடிவி தினகரன் இந்த கூட்டணியை அமைக்க இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

என்னதான் தமிழகத்திலே அதிமுகவும் திமுகவும் மாபெரும் வாக்கு வங்கி கொண்ட கட்சிகளாக இருந்தாலும் அதனை புதிதாக உருவான ஒரு கட்சி பலமாக எதிர் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக பக்கபலம் மிகப் பெரிதாக இருக்க வேண்டும் என்பதை டிடிவி தினகரன் சரியாக கணித்து இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அப்படி சரியாக கணித்ததன் விளைவு தான் இந்த கூட்டணி என்று தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த கட்சி கூட்டணி வைத்த அணி எதிரணிக்கு மிக சவாலாக இருந்தது. அதன் காரணமாக தேர்தலில் வெற்றி பெறுவது எதிர்க்கட்சிகளுக்கு மிக சவாலாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடைபெற்ற பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ஓவைசி கட்சி கூட்டணி வைத்த அணி வாக்கு எண்ணிக்கையின் போது இந்த கட்சியின் கூட்டணி அல்லாமல் யாருமே ஆட்சிக்கு வர முடியாது என்ற ஒரு நிலை கூட ஏற்பட்டது.

இதனால் பீகார் மாநில அரசியல் ஸ்தம்பித்துப் போய் விட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கட்சியுடன் தான் தற்சமயம் டிடிவி தினகரன் கூட்டணி வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்தக் கட்சியின் பலத்தை உணர்ந்த தமிழக அரசியல் கட்சிகள் சற்றே கலங்கிப்போய் தான் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இதனால் தினகரன் தரப்பு மிகவும் குஷியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.