ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்தது எப்படி?

0
234
#image_title

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்தது எப்படி?

காலை 11:15 மணியளவில், ராணுவ துருவ் ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் பகுதியில் ஹெலிகாப்டர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருவா ஆற்றின் கரையில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அவசரமாக தரையிறங்கியதில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு பணி நடைபெற்று. இந்திய ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் பயணம் செய்துள்ளனர்.

காயமடைந்த மூன்று பேரும் உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக ராணுவ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி நிலையில் மூன்று பேர் காயமடைந்ததாக ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleமதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும்: திருப்பூரில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பேட்டி!
Next articleகுப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!