ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

0
138

ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

உலக அளவில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் ஐசிசி , ஒவ்வொரு ஆண்டும் தர வரிசையை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் வெளியிட்டுள்ள தர வரிசையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தர வரிசையில் ஆஸ்திரேலியாவும், ஒரு நாள் தர வரிசையில் இங்கிலாந்தும் முதலிடம் வகுக்கிறது.

அக்டோபர் 2016 முதல் தொடர்ந்து 43 மாதங்கள், ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் வகித்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் கைவிடப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் உள்ள நிலையில் எப்படி இந்திய அணி சரிவைச் சந்தித்தது என்ற கேள்வி எழலாம்.

சமீபத்திய தரவரிசை 2019 மே முதல் 100 போட்டிகளிலும், முந்தைய இரண்டு ஆண்டுகளில் 50 சதவீதத்திலும் விளையாடிய அனைத்து போட்டிகளையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய தரவரிசை இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான சாதனைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் வரையப்பட்ட பட்டியலாகும். அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலேயே அது முதலிடத்தை பிடித்துள்ளது.

தற்போதைய பட்டியலில் இந்தியா மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் இந்தியாவே முதலிடத்தை வகுத்து வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

Previous articleபெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்
Next articleசீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா