சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படமானது எப்படிவுள்ளது?என்பதைப் பற்றியும் இப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னென்ன என்பதையும் கீழே காண்போம்:

பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது 700 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திகழ்ந்தது.

இதனை தொடர்ந்து இன்று சந்திரமுகி 2 பாகத்தை பி.வாசு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கியமான, சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருக்கிறார். மேலும் சந்திரமுகி 1 ஆம் பாகத்தில் நடித்திருந்த வடிவேலு அவர்கள் சந்திரமுகி 2லும் நடித்திருக்கிறார்.

சந்திரமுகி 2 திரைப்படமானது முதலில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. ஒரு சில காரணங்களினால் இப்படமானது இன்று வெளியாகி உள்ளது.

இன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். படத்தில் நடித்த கங்கனா அவர்களை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

மேலும் சந்திரமுகி 1 விட சந்திரமுகி 2ஆம் பாகம் பிரம்மாதமாக அமைந்துள்ளது எனவும், இதில் இடம்பெற்றுள்ள திரில்லர் காட்சிகள் மற்றும், மியூசிக், போன்றவை நன்றாக உள்ளது எனவும் மக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தின் விமர்சனங்களை எல்லாம் பார்க்கும் போது இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.