அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

0
31
#image_title

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட பொழுது கையில் அடிபட்டது. அப்பொழுது அவர் கையில் பேண்ட் டெய்ட் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்தித்து வருகிறார்.

இதில் ஒரு பகுதியாக அண்ணாமலை அவர்கள் கடந்த வாரம் வால்பாறையில் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடம் பேசினார். அப்பொழுது வாகனத்தில் ஏறும் பொழுது அண்ணாமலை அவர்களுக்கு வலது கையில் உள்ள கட்டை விரலில் அடிபட்டது. பின்னர் கையை உதறித் கொண்டே வாகனத்தில் ஏறிய அண்ணாமலை அவர்கள் மக்களிடம் பேசத் தொடங்கினார்.

அண்ணாமலை அவர்களின் கையில் அடிபட்டது அறிந்த பொதுச் செயலாளர் முருகாணந்தம் அவர்கள் தொண்டர்களிடம் பேண்ட் டெய்ட் வாங்கி வருமாறு கூறினார். பின்னர். திருடர்கள் பேண்ட் டெய்ட் வாங்கி வந்து கொடுத்தனர்.

பின்னர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை அவர்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் முருகாணந்தம் அவர்கள் வாங்கி வந்த பேண்ட் டெய்ட் ஒட்டினார். ஆனால் அடிபட்டது வலது கையில் உள்ள கட்டை விரலில் என்பது குறிப்பிடத்தக்கது.

பதற்றத்தில் கை மாறி விரல் மாறி பேண்ட் டெய்ட் ஒட்டியதை பார்த்த அண்ணாமலை அவர்கள் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.