எத்தனை கிலோவாக இருந்தாலும் சாதாரணமாக குறைக்கலாம்! அதற்கு கேரட் மட்டுமே போதும்!

Photo of author

By Sakthi

எத்தனை கிலோவாக இருந்தாலும் சாதாரணமாக குறைக்கலாம்! அதற்கு கேரட் மட்டுமே போதும்!
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. கேரட்டில் விட்டமின்கள், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள், பெட்டாசியம், தாதுக்கள் என அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது.
பொதுவாக கேரட் சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. கேரட்டை நாம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தலாம். முகத்தில் உள்ள முகப்பருக்களை களையவும் பயன்படுத்தலாம். மேலும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் இந்த கேரட்டை எவ்வாறு உடல் எடையை குறைக்க எப்படி சாப்பிடுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கேரட்
* மோர்
செய்முறை…
கேரட்டை எடுத்து சுத்தம் செய்து கொண்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள கேரட் துண்டுகளை இந்த மோரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு அரைத்த பின்னர் ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே குடிக்கலாம். இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும்.