ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!!

0
144

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டனர். தக்கவைத்து கொண்ட வீரர்கள் போக மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்டனர். இந்த மெகா ஏலம் இந்த ஆண்டு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்ட 600  வீரர்களிள் 204 பேர் விற்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது என தெரிவித்திருந்தார். மேலும், ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் குரூப்பில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல். இரண்டாவது குரூப்பில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள அணிக்கு எதிராக இரண்டு முறை மோத வேண்டும். அதே போல் மற்ற குரூப்பில் உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு முறை மோத வேண்டும்.

இதை தவிர இரண்டு குரூப்பிலும் தங்கள் வரிசைக்கு எதிராக உள்ள அணியிடம் இரண்டு முறை மோதவிருக்கின்றன. அதாவது, முதல் குரூப்பில் முதல் இடம் பெற்றுள்ள மும்பை அணியும் இரண்டாவது குரூப்பில் முதல் இடம்பெற்றுள்ள சென்னை அணியும் இரண்டு முறை பலப்பரீச்சை நடத்தும். இதுபோல், மற்ற அணிகளும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகுழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!
Next articleபள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!