கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

Photo of author

By CineDesk

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

பலருக்கும் கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு பெரும் முதலீடாக இருக்கிறது. நம் நாட்டில் கார் வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன் திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆனால், தங்களது வருவாய்க்கு தகுந்தவாறு சரியான கடன் திட்டங்களையும், பட்ஜெட்டையும் தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். அதுகுறித்த சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

கடன் திட்டம்
கார் கடன் திட்டங்கள் பல்வேறு திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்டதாக இருக்கிறது. புதிய காருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் [84 மாதங்கள்] வரையிலும், பழைய காருக்கு 5 ஆண்டுகள் [60 மாதங்கள்] வரையிலும் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் கொடுக்கப்படுகிறது. பழைய கார் என்றால் தயாரிப்பு ஆண்டுக்கு தக்கவாறு கார் கடன் திட்டத்தின் திருப்பிச் செலுத்தம் கால அளவு மாறுபடும்.

வருவாய்க்கு தக்கவாறு திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம். கார் கடன் வாங்குவதற்கு, சிலருக்கு வருவாய் போதுமானதாக இருக்காது. அது போன்ற சூழல்களில், மனைவி அல்லது குடும்பத்தில் வருவாய் உள்ள மற்றொரு உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொண்டு அதிகபட்சமான திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

இதன் மூலமாக, மாதத் தவணை குறைவாக இருக்கும் என்பதால், மாத செலவுகளை சமாளிக்க ஏதுவாகும். ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரூ. 35,000 மாத வருமானம் உள்ளவர்கள் மாதத் தவணை ரூ.10,000க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.