பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!!

Photo of author

By Parthipan K

பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2 முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2  படத்தை எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன். அந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இதில் அவருடன் ராதாரவி, YG. மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்தியவிலேயே 7வது பெரும் பணக்காரர் விஜய் ஆண்டனி, ஆவார். தன்னுடைய நண்பர் தேவ் கில், ஆடிட்டர் ஜான் விஜய், குடும்ப மருத்துவர் ஹரிஷ் பெரேடி ஆகியோரை மட்டும் நம்புகிறார்.

அனால் அவர்கள் விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சை முறையை தேர்வு செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தர்களா? யாருடைய மூளையை பணக்காரர்கள் விஜய் ஆண்டனிக்கு மாற்றினர்? அவர் யார்? சதி திட்டம் நிறைவேறியதா இறுதியில் என்ன ஆனது என்பதே பிச்சைக்காரன்-2. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தில்லாமல் உருவாக்கியுள்ளனர். பிச்சைக்காரன்-2 படத்துடைய திரைக்கதை இந்தியாவின் பெரும் பணக்காரன் மற்றும் பிச்சைக்காரன் வாழ்க்கையை சம்மந்திப்படுத்தி, தொலைத்த தங்கச்சியை கண்டுபிடிக்க முயற்சிக்க சென்று இறுதியில் பணமுள்ளவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்ற இடத்தில் முடிகிறது.

கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்கை பின்னணியில் சென்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே ஒர்கவுட் ஆகும். மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 ஒரு பொருதம்மில்லாமல் உள்ளது. இந்நிலையில் இப்படம் வெளிவந்த 8 நாட்களில் உலகளவில் ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.