சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்?
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ 100 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக வழங்கியது. மேலும் மத்திய அரசு நுகர்வோர்டமிருந்து சிலிண்டருக்கான முழு கட்டணத்தையும் வசூல் செய்து விட்டது. அதன் பிறகு அதற்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மானிய தொகை ரூ. 200 வரை வழங்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக மானியம் ரூ 100 வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மானியம் நிறுத்தப்பட்டது. சிலிண்டர் விலையும் உயர்ந்தது. மானியம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். முதல்வர் மு க ஸ்டாலின் சிலிண்டர்களுக்கு ரூ 100 மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்நிலையில் சிலிண்டர் மானியம் வாங்குவது தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் வீட்டு உபயோக அமைய சிலிண்டர் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
முன்னதாகவே பட்ஜெட்டில் குடும்ப தலைவர்களுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அதன் மூலம் மகளிருக்கான உரிமை தொகை அறிவிப்பு நிச்சயம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் சிலிண்டருக்கான ரூ 1௦௦ மானியமும் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.