அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!
பிகில் படத்தோடு சம்மந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டுக்கு மிக முக்கியமானக் காரணம் ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன ஊதிப் பெருக்கப்பட்ட வசூல் கணக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்மந்தமாக எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது மற்றும் அடுத்தகட்ட விசாரணை தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரெய்டுக்கு பிகில் படக்குழு செய்த ஒரு செயலும் முக்கியமானக் காரணம் என சொல்லப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களை குஷியாக வைத்துக்கொள்ள படத்தின் வசூல் சாதனை விவரங்கள் இப்போது தேவைப்படுகின்றன. இந்த விவரங்களை அறிவிப்பதற்காகவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் என்ற சிலர் உள்ளனர். இவர்களின் டிவிட்தான் ரசிகர்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
பிகில் படம் வெளியான போது ஒவ்வொரு நாளும் இதுபோல டிராக்கர்ஸ் படம் இத்தனைக் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என அடுக்கிக் கொண்டே சென்றனர். இது ரசிகர்களை சிலிர்த்துப் போய் சில்லறைகளை சிதற விட வைத்தது. இந்த ஆன்லைன் டிராக்கர்ஸ்தான் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவித்தவர்கள்.படத்தின் தயாரிப்பு நிறுவனம் எந்த இடத்திலும் வசூல் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் இதுபோன்ற டிராக்கர்ஸ்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவித்து ரசிகர்களை போதை மனநிலையிலேயே இருக்க வைத்தது. இந்த செயல்தான் இப்போது ரெய்டில் அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த வசூல் விவரங்களை வைத்தேக் கேள்விகள் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ரெய்டு சிக்கல்களுக்கு தயாரிப்புக் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.