வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

Photo of author

By Savitha

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

Savitha

இந்தியா குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று, பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் அனைத்து இடத்திலும் முக்கியமான ஆவணமாக முதன்மையாக இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டையை ஆன்லைனிலு,ம் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இப்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் எப்படி பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டையை விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.

1) முதலில் uidai.gov.in என்கிற UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2) இப்போது ஆதார் அட்டைப் பதிவுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.

3) இதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பிற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.

4) புதிதாகப் பிறந்த குழந்தையின் விவரங்களைப் நிரப்பிய பின்னர் முகவரி, வட்டாரம், மாவட்டம், மாநிலம் போன்ற பிற தகவல்களை நிரப்ப வேண்டும்.

5) அதன்பிறகு Fix Appointment என்கிற டேப்பை கிளிக் செய்யவும்.

6) புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டை பதிவு தேதியை அமைக்க வேண்டும்.

7) பின்னர் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மேற்கணட செயல்முறையை பின்பற்றி ஆன்லைன் வாயிலாக படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை சமர்பிப்பதற்கு முன்னர் குழந்தையின் ஆதார் விவரங்களில் பிறந்த தேதியை பெற்றோர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஐந்து வயது ஆனதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்.