ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி?

0
582
How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil
How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil

ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி?

தற்போதைய காலகட்டத்தில் புது புது நோய்கள் உருவாகி மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற சுகாதாரம் மற்றும் உணவுமுறை பழக்கம் தான்.இதனால் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

பணம் இருப்பவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களால் சிறிய நோய் பாதிப்பை கூட குணப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

இந்நிலையில் நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதமாக நோக்கில் மத்திய அரசு ‘Ayushman Bharat’, ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா‘ (AB-PMJAY) என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.மத்திய அரசால் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு ஏழைகளுக்கு மட்டும் என்று இருந்து வந்த நிலையில் தற்பொழுது அதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் யாராக இருந்தாலும் மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும் என்று குடியரசு தலைவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 70 வயதிற்கு கீழ் இருக்கின்றவர்களின் ஏழை எளிய மக்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு மூலம் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியும்.70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருந்த போதிலும் முன்கூட்டியே இலவச மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.

Ayushman Bharat இலவச மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

தேவையான ஆவணங்கள்:-

1) ஆதார் அட்டை

2) ரேசன் அட்டை

3) முகவரிச் சான்று

How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil

முதலில் https://abdm.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று Create ABHA Number என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.இவ்வாறு செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.அதை என்டர் செய்த பின்னர் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யவும்.

பிறகு புதிய பயனாளர் என்பதை கிளிக் செய்து இலவச மருத்துவ காப்பீடு பெற விண்ணப்பம் செய்யுங்கள்.

Previous article500 ரூபாய்க்கு 1.5 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபிசில் அட்டகாசமான சேமிப்பு திட்டம் 
Next articleஇனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம்