உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !

Photo of author

By Savitha

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !

Savitha

Updated on:

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்தால் தான் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கலோரிகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி நமது உடலை வலுவாக்கும் மற்றும் எவ்வித நோய் பாதிப்பும் வராமல் தடுக்கும். ஆரோக்கியமான வாழ்வுக்கு அன்றாடம் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

கடுமையாக உடற்பயிற்சி செய்யும்பொது நமக்கு தசைகளில் வலியோ அல்லது உள்பக்க தசைகளில் ஏதேனும் காயங்களோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆவர் ஏற்படாமல் இருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், அப்போது தான் நாம் எவ்வித இடையூறுமின்றி உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யமுடியும்.

1) பெரும்பாலான மக்கள் காலை வேளையில் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளலாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு உடற்ப்பயிற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது உடல் சோர்வடையும் மற்றும் பயிற்சிக்கு தேவையான ஆற்றல் சரிவர கிடைக்காது.Set Of Morning Exercises Men And Women Warming Up Stock Illustration - Download Image Now - Warm Up Exercise, Group Of People, Pilates - iStock

2) உடற்பயிற்சியின் போது உங்களுக்கு தசையில் வலிகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கடினமான உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன்னதாக நீங்கள் சில வார்ம்-அப் பயிற்சிகளை செய்ய என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.How Often You Should Work Out According to Experts – Cleveland Clinic

3) தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர், அப்படி ஒரே மாதிரியான பயிற்சிகளை தோடர்ந்து செய்யும்போது அது நரம்பு ரீதியில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அதனால் வெவ்வேறு புதிய பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்யலாம்.Sleep cannot be replaced by rest, says study - The Week

4) தொடர்ந்து எல்லா நாளும் உடற்பயிற்சி செய்யக்கூடாது, கட்டாயம் வாரத்தில் ஒருநாள் நீங்கள் உங்கள் தசைகளுக்கும் மொத்த உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். புதிதாக உடறபயிற்சி செய்ய தொடங்குபவர்கள் வாரத்தில் 2-3 நாட்கள் செய்யவேண்டும், பின்னர் படிப்படியாக இதனை உயர்திக்கொள்ளலாம்.