பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிடுவது எப்படி?

0
157

கடந்த மூன்று மாதமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மையமாக வைத்து  பல பரபரப்புகள் நடந்தேறின. ஒரு வழியாக பொதுத் தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வர் பத்தாம் வகுப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்கள் இல் இருந்து 80 சதவீத மதிப்பெண்ணும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் சேர்த்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர் என்று அறிவித்துள்ளார்.

இதனால் பலருக்கு இதனை எப்படி கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை எளிதாக விளக்குவதற்கே இந்த பதிவு.

உதரணத்திற்க்கு உங்கள் மகன்/மகள் காலிறுதி பரீட்சையில் 350 மதிப்பெண்களும், அரையிறுதி பரீட்சையில் 400 மதிப்பெண்களும் எடுத்து 90% வருகை பதிவேடு வைத்துள்ளார்கள் என்றால் அவரது இறுதி மதிப்பெண் 390 ஆக இருக்கும்.

எப்படி? இந்த கணக்கீட்டைப் பாருங்கள்:  

காலாண்டு பரீட்சை மதிப்பெண்ணை 40டன் பெருக்கி 100டன் வகுத்துக் கொள்ளுங்கள்: 350 x 40 ÷ 100   = 140

அரையாண்டு பரீட்சை மதிப்பெண்ணை 40டன் பெருக்கி 100டன் வகுத்துக் கொள்ளுங்கள்: 400 x 40 ÷ 100 = 160

இப்போது அவர்களின் வருகை பதிவேட்டை கணக்கிடுங்கள் 200 நாட்களில் 180 நாட்கள் அவர்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் 180 / 200 = 0.90 இதனை நூறால் பெருக்க வேண்டும் 0.90 * 100 = 90

இப்போது மொத்தமாக கூட்டுங்கள் 140 + 160 +  90 = 390. இது தான் இறுதி மதிப்பெண்.

Previous articleராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா
Next articleதேவஸ்தான கோவில் அர்ச்சகருக்கு கொரோனா