பொதுவாக சைனஸ்,டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள்.இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது.
இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகும் போது ஈசியாக சுவாசிப்பதற்கு இன்ஹேலரை -யை (Inhaler) பயன்படுத்த சொல்வார்கள்.
ஆனால் இந்த இன்ஹேலரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் ஆயுசுக்கும் இது இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.எனவே டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு,கீழே சொல்லும் கசாயத்தையும்,மூச்சு பயிற்சியும் செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.
கற்பூரவள்ளி கசாயம்:
கற்பூரவள்ளி இலை 6, இஞ்சி சிறிதளவு, கருந்துளசி இலை சிறிதளவு இது மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டம்ளர் வரும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரின் நிறம் பச்சை நிறமாக மாறும்.இதனை தேனீர் சூடாக குடித்தால் அரைமணி நேரத்தில் சுவாசம் சமநிலை ஆக்கப் படும்.இதே மூலிகை நிரையும் சுவாச பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகையில் முற்றிலுமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
முக்கியகுறிப்பு: இன்ஹேலர் திடீரென்று தீர்ந்துவிட்ட சமயத்தில் மூச்சு விட சிரமப்படுபவர் இந்த கசாயத்தை குடித்தால் மூச்சுவிடுதல் சமநிலை ஆகும்.