ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க!
அண்மையில் பிளாஸ்டிக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணை வைத்து அதன் தரத்தை கண்டுபிடிப்பது எப்படி மேலும் எந்த வகை பிளாஸ்டிக் மனிதப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பதனை பற்றி தெரிந்து கொண்டோம்.அதேபோன்று இன்று இந்த பதிவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களை வைத்து அதன் தரம் மற்றும் எதை பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டில் பாத்திரங்கள் 304ss, 316 Ss,430ss போன்ற மூன்று வகை உள்ளது.
இதில் 304Ss வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்18/8 Ssஎன்றும் பொதுவாக அழைப்பர்.இதில் 18% குரோமியம் மற்றும் 8%நிக்கல் உள்ளது.இந்த வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீல் உப்பினால் அரிக்கப்படும் தன்மை கொண்டது.எனவே இந்த வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் நாம் உப்பை பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள கெமிக்கல் வெளியே வர வாய்ப்புள்ளது.இந்த வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீல் முழுமையான ஃபுட்கிரேட் (food grade) கிடையாது.
430ss வகை ஸ்டைன்லெஸ் நிக்கலை குறைத்து தயாரிக்கப்படுகிறது.இதனால் இதன் விலையும் மிக குறைவு.இது உணவில் இருக்கும் அமிலத்தன்மையிலையே அரிக்கக்கூடும்.எனவே இந்த வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் சமைப்பதற்கு உகந்தது அல்ல.இதுவும் முழுமையான புட்கிரேட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிடையாது.
316Ss வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீல்: இதனை 18/10ss என்றும் சொல்லுவர்.இந்த வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீலானது குரோமியம் மற்றும் மாலிப்டீனம் கலவையால் ஆனது.இந்த வகை ஸ்டைன்லெஸ் ஸ்டீலானது எந்த வகை குளோரைடு,ஆசீட் போன்ற பொருட்களால் அரிக்கப்படுவதில்லை.இந்த வகையானது சுமார் 800 டிகிரி செல்சியஸிருக்கு மேல் வெப்பத்தையும் தாங்க கூடியது.நல்ல தரமான ஃபுட் கிரேட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எதுவென்றால் 316ss யை கூறலாம்.இது மிகவும் சமைப்பதற்கு உகந்ததாகும்.