இன்று சமையல் செய்ய முக்கிய மூலதனமாக விளங்குவது எரிவாயு சிலிண்டர் தான்.விறகு அடுப்பில் சமைத்த காலம் மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு மக்கள் முன்னேறிவிட்டனர்.
கேஸ் அடுப்பில் சமைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது.அது மட்டுன்றி பிடித்த உணவுகளை உடனடியாக செய்து குடும்பத்தினருக்கு பரிமாற முடியும்.இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச இணைப்பு வசதியை மத்திய அரசு வழங்கி வருவதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.விறகு அடுப்பில் சமைத்தால் சுவாசப் பிரச்சனை ஏற்படும்.ஆனால் கேஸ் அடுப்பில் சமைப்பதால் இது போன்ற எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
ஆனால் கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.சிலிண்டர் வாங்கினால் கேஸ் லீக் ஆகுதா? சிலிண்டரின் காலாவதி தேதி உள்ளிட்டவற்றை சரி பார்க்க வேண்டும்.இதுபோன்ற செயல்களால் விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிலிண்டரின் A-24,B-23,C-24 அல்லது D-25 போன்ற எழுதி எழுதி இருப்பதை நோட் செய்திருக்கிறீர்களா? இது தான் சிலிண்டரின் காலாவதி தேதி ஆகும்.சிலிண்டரில் குறிப்பிட்டுள்ள A என்பதற்கு ஜனவரி முதல் மார்ச் வரை என்று அர்த்தம்.அதேபோல் B என்றால் ஏப்ரல் முதல் ஜூன் வரை,C என்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரை மற்றும் D என்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்று அர்த்தம்.
மேலும் A,B,C மற்றும் Dக்கு பிறகு குறிப்பிட்டுள்ள எண்கள் ஆண்டை குறிக்கிறது.23,24,25 என்பது சிலிண்டரின் காலாவதி ஆண்டு ஆகும்.உதாரணத்திற்கு நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டரில் A-25 என்று குறிப்பிட்டிருந்தால் அது 2025 மார்ச் மாதம் வரை பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.