ஆன்லைனில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி? இந்த ஒரு ஆவணம் இருக்கானு செக் பண்ணுங்க!!

Photo of author

By Divya

வாகன ஓட்டிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒரு அதிகாரபூர்வ ஆவணம் ஓட்டுநர் உரிமம்.இந்த ஆவணத்தை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது என்பது போக்குவரத்து விதிப்படி குற்றமாகும்.

ஒருவர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது,அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைளில் போக்குவரத்து காவல் துறை ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அல்லது முழுமையாக சேதமடைந்து இருந்தாலோ உடனே டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்வது நல்லது.

டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?

தேவைப்படும் ஆவணங்கள்:

1)LLD விண்ணப்பப் படிவம்
2)ஓட்டுநர் உரிமம் திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதற்கான FIR அறிக்கை.
3)ஓட்டுநர் உரிமம் சேதமடைந்து இருந்தால் அதன் நகல்
4)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

முதலில் பரிவஹன் சேவா(parivahan.gov.in) போர்ட்டலுக்கு செல்லவும்.பிறகு அதில் “டிரைவிங் லைசென்ஸ் சேவைகள்” என்ற விருப்பத்தை செலக்ட் செய்யவும்.அதன் பிறகு அதில் “நகல் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பிறகு அதில் கேட்கப்படும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.பின்னர் FIR நகல்,முகவரி சான்று,பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும்,ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

அதன் பிறகு உரிய ஆன்லைன் கட்டணத்தை செலுத்தினால் ஒரு மாதத்திற்குள் டூப்ளிகேட் லைசென்ஸை பெறலாம்.