ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி?
இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு எந்த நோய் எப்பொழுது வருமென்றே சொல்ல முடியாது.கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை மருத்துவமனைகளில் தான் அனைவரும் கொட்டி வருகின்றனர்.
நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம்.அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம்.இதற்காக தான் மத்திய மற்றும் மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியது.இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சேவை பெற முடியும்.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மொத்தம் 17,000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதன் மூலம் பயனாளிகளுக்கு அறுவை மற்றும் நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் பயன்கள்:-
1)கொடிய நோய்களுக்கு செலவின்றி மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.
2)ஆயுஷ்மான் காப்பீடு அட்டை மூலம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.5,00,000 வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
3)அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி.
ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
தேவைப்படும் ஆவணங்கள்:-
*ஆதார் கார்டு
*ரேசன் கார்டு
*தொலைபேசி எண்
முதலில் PMJAY என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்யவும்.பிறகு கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும்.உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்னர் ஆயுஷ்மான் கார்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.