வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி,எலி நடமாட்டம் என்பது தற்பொழுது அதிகரித்து வரும் பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கிறது.குறிப்பாக எலி நடமாட்டம் மற்றும் அதன் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த எலிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கோதுமை மாவு
2)மிளகாய்த் தூள்
3)சோப்
4)டெட்டால்
5)கைக்குட்டை
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கோதுமை மாவு சேர்க்கவும்.எலி நடமாட்டம் அதிகம் இருந்தால் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.
எலி நடமாட்டம் குறைவாக இருந்தால் ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் ஒரு துண்டு குளியல் சோப் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி டெட்டால் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு ஒரு கைக்குட்டை எடுத்துக் கொள்ளவும்.அதில் இரண்டு தேக்கரண்டி டெட்டால் ஊற்றி ஊறவிடவும்.அடுத்து கலந்து வைத்துள்ள கலவையை அதில் கொட்டி மூட்டை போல் கட்டி எலி நடமாட்டம் உள்ள இடத்தில் வைக்கவும்.இப்படி செய்தால் எலி நடமாட்டம் முழுமையாக கட்டுப்படும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:
1)மாத்திரை
2)கோதுமை மாவு
செய்முறை விளக்கம்:
ஒரு கிண்ணத்தில் இரண்டு மாத்திரையை இடித்து சேர்க்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.இந்த உருண்டைகளை எலி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்தால் அதன் தொல்லை ஒழியும்.