Kitchen Tips in Tamil: உப்பில் நீர் கோர்க்காமல் இருக்க எளிய டிப்ஸ்..!

0
193
Kitchen Tips in Tamil
#image_title

Kitchen Tips in Tamil: நமது கிச்சனில் எது இருக்கோ, இல்லையோ கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது உப்பு தான். ஒரு உணவிற்கு சுவையை தருவது எது என்று பார்த்தால் கட்டாயம் அது உப்பு தான். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பு இல்லாமல் ஒரு உணவு பொருள் சமைத்தால் கட்டாயம் அது குப்பைக்கு தான் செல்லும். பொதுவாக நாம் ஒரு இனிப்பு செய்தாலும் அதில் ஒரு பிஞ்ச் அளவிற்கு உப்பு சேர்த்தால் தான் கூடுதல் சுவை கிடைக்கும்.

இவ்வாறாக நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி போன உப்பு சில நேரங்களில், அதாவது மழைக்காலம் போன்ற காலங்களில் நீர் கோர்த்து தண்ணீயாக இருக்கும். அதனை உபயோகப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கும். நாம் இந்த பதிவில் உப்பில் நீர் கோர்க்காமல் இருக்க என்ன வழிகள் என்பதை பார்க்கலாம்.

ஜாடியை தேர்ந்தெடுக்கவும்

பொதுவாக உப்பை கொட்டி வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஜாடியானது பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியாக இருக்க வேண்டும். உப்பை பயன்படுத்துவதற்கு சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது. சில்வர் பாத்திரங்கள் வெப்பத்தை கடத்தும் தன்மைக்கொண்டதால் அதனை பயன்படுத்துவது சிறந்தது அல்லது. மேலும் மழை மற்றும் குளிர்க்காலங்களில் குளிர்ச்சியான தன்மையாக இருப்பதால் உப்பில் நீர் கோர்த்துவிடும்.  எனவே உப்பை கண்ணாடி மற்றும் பீங்கான் ஜாடிகளில் கொட்டி வைப்பது சிறந்தது.

பச்சை மிளகாய் 

உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் பச்சை மிளகாய் ஒரு இரண்டினை போட்டு வைக்கலாம். காய்ந்த மிளகாய் போடக்கூடாது. பச்சை மிளகாய்யை போட்டு சிறிது நாட்களுக்கு பிறகு நிறம் மாறியதும் எடுத்துவிட்டு வேறு பச்சை மிளகாயை அதில் போட்டு வைத்தால் நீர் கோர்காது.

ஸ்பூன் பயன்படுத்தவும்

நாம் சமைத்துக்கொண்டிருக்கும் போது அவசரமாக கையால் உப்பு எடுத்து போடுவோம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதில் ஒரு சில்வர் ஸ்பூன், பீங்கான் ஸ்பூன் அல்லது மரத்தாள் ஆன ஸ்பூனை உபயோகப்படுத்தினால் உப்பில் நீர் கோர்காது.

கிராம்பு 

இந்த கிராம்பை கல் உப்பு மற்றும் தூள் உப்பில் போட்டு வைக்கலாம். கிராம்பு போட்டு வைப்பதால் உப்பில் ஈரப்பதம் கோர்ப்பது தடுக்கப்படுகிறது. தூள் உப்பில் இது கலந்து வைத்தால் நீங்கள் உப்பை பயன்படுத்தும் போது கிராம்பு கிடப்பது தெரிந்துவிடும். எனவே இதனை நீங்கள் தூள் உப்பில் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: இந்த வெயிலுக்கு அடுப்பு இல்லாமல் வெறும் 3 பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி?