Mango Halwa Recipe in Tamil: ரொம்ப ஈஸியான இந்த மாம்பழ அல்வா ட்ரை பண்ணுங்க..!

0
162
Mango Halwa Recipe in Tamil
#image_title

Mango Halwa Recipe in Tamil: கோடைக்காலத்தில் அனைவரும் பழங்களை வைத்து குளிர்ச்சியான ஜுஸ் செய்து அருந்தி வருகின்றனர். முக்கியமாக தர்பூசணி, ஆரஞ்ச் போன்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயார் செய்து இந்த வெயில் காலத்தை கழிக்கிறார்கள். அந்த வகையில் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிட நாம் தவறுவதில்லை. கோடை காலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் இந்த மாம்பழத்தை வாங்கி நாம் அனைவரும் சாப்பிடுவோம். மாம்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அந்த வகையில் மாம்பழத்தை வாங்கி அப்படியே சாப்பிட்டாமல் புதுமையாக அல்வா செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

மாம்பழத்தில் ஜூஸ், ஐஸ்கீரிம் ஆகியவை நாம் அடிக்கடி செய்து சாப்பிடுவோம். ஆனால் மாம்பழத்தில் அல்வா செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தாேன்றும். இந்த பதிவில் நாம் சுவையான மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று (How to make Mango Halwa Recipe in Tamil) பார்க்கலாம்.

தேவையான பாெருட்கள் 

  • மாம்பழம் – 2
  • பால் – 4 டம்ளர்
  • சர்க்கரை – 1/2 கப்
  • நெய் – தேவையான அளவு
  • சோள மாவு – 2 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும்.
  • அதன்பிறகு மாம்பழத்தை நன்றாக கழுவிய அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழ துண்டுகள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • அதன்பிறகு அதில் காய்ச்சி ஆறவைத்துள்ள பாலை அதனுடன் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு எடுத்து வைத்துள்ள சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை கட்டி விழாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழ கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்து கெட்டியான பிறகு, அதில் கரைத்து வைத்துள்ள சோளமாவை சேர்த்து அடிப்பிடிக்காதவாறு கிளறவேண்டும். சோளமாவு சேர்த்தவுடன் மாவு கெட்டியாகி விடும்.
  • அதன் பிறகு இதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற வேண்டும். நன்கு சுருண்டு வந்தவுடன் மீண்டும் நெய் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். அதனை ஒரு பெளலுக்கு மாற்றினால் சுவையான மாம்பழ அல்வா தயார்.

மேலும் படிக்க: வெறும் 5 நிமிடம் போதும்.. இந்த வெயிலுக்கு டேஸ்டியான ரோஸ் மில்க் தயார்..!