முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Rupa

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!!

Rupa

Want to make your face glow! Try this!!

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!!

நமது முகம் பளபளப்பாக புத்துணர்ச்சியுடன் மாற வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நாம் அடிக்கடி வெளியே வெயிலில் சென்று விட்டு மறுபடியும் வீட்டுக்கு வருவோம். வெளியில் செல்லும் பொழுது பொலிவாக பளபளப்பாக இருக்கும் நம்முடைய முகம் வீட்டுக்கு வரும் பொழுது அப்படியே மாறிவிடும்.பொலிவில்லாமல் சோர்வுடன் காணப்படும். இந்த பொலிவு இழந்த முகத்திற்கு நாம் மீண்டும் பொலிவாக்க மேஜிக்கல் ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.

இந்த மேஜிக்கல் ஃபேஸ் பேக் முக அழகை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். இந்த மேஜிக்கல் ஃபேஸ் பேக்கின் அடிப்படையான பொருள் கடலை மாவு ஆகும். கடலை மாவை வைத்து சாதாரணமாக  முகத்தை கழுவி வந்தாலே முகத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த கடலை மாவுடன் இன்னும் சில பொருட்களை சேர்த்து முகத்திற்கு பளபளப்பை தரும் இந்த மெடிக்கல் ஃபேஸ் பேக் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

மெடிக்கல் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்…

* கடலை மாவு – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

* பாதாம் பவுடர் – 1 டீஸ்பூன்

செய்முறை…

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த பவுலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதில் பாதாம் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இதில் சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.தற்பொழுது முகத்தை பளபளப்பாக அழகாக மாற்றும் மேஜிக்கல் ஃபேஸ் பேக் தயாராகி விட்டது.

இந்த கலவையை முகத்தில் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன் பின்னர் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.அதன் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரை கொண்டு கழுவி துடைக்காமல் அப்படியே உலர விடவும்.

இந்த மேஜிக்கல் ஃபேஸ் பேக் முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம். இதன் மூலமாக சுத்தமான சருமத்தை பெற முடியும்.