உங்கள் வீட்டு பூஜை அறையை பராமரிப்பது எப்படி? இதை செய்தால் மன நிறைவு உண்டாகும்!!

0
196
How to maintain your home puja room? Doing this will give you satisfaction!!
How to maintain your home puja room? Doing this will give you satisfaction!!

இன்று கட்டமைக்கப்படும் அனைத்து வீடுகளிலும் பூஜை அறை கட்டாயம் இருக்கிறது.பூஜை அறையில் கடவுள் படங்களை வைத்தால் மட்டும் முழு பலன் கிடைத்துவிடாது.பூஜை அறையை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பூஜை அறையை முறையாக பராமரித்து பூஜை செய்தால் மட்டுமே கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும்.பூஜை அறையில் காய்ந்த மாலைகள்,எலுமிச்சை மற்றும் பழைய பூஜை பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி கால் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.

பூஜை அறையில் ஒட்டடை இருந்தால் தெய்வ கடாச்சம் குறைந்துவிடும்.எனவே பூஜை அறையில் உள்ள ஒட்டடை,குப்பை போன்றவை இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

பச்சை கற்பூரத்தை நீரில் கரைத்து பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்தால் தெய்வ கடாச்சம் பெருகும்.பிறகு கடவுளின் திருவுருவப் படங்களை பன்னீர் கலந்த தண்ணீரில் துடைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து மாலை சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

அதன் பின்னர் பூஜை அறையில் அரிசி மாவில் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும்.பிறகு பல்லி மற்றும் பூச்சிகள் பூஜை அறையில் அண்டாமல் இருக்க மயிலிறகை வைக்க வேண்டும்.பூஜை அறையில் எரியும் விளக்குகளை வாயால் ஊதி அணைக்கக் கூடாது.மலர்களை வைத்து விளக்கை அணைக்க வேண்டும்.

நல்ல மணமுள்ள சாமந்தி,குண்டுமல்லி,பன்னீர் ரோஜா,சம்மங்கி போன்ற மலர்களை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக் கூடாது.இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும்.

Previous articleமீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??
Next articleஎலிகளை விரட்ட ஒரு ஸ்பூன் கோதுமை மாவு போதும்!! இப்படி செய்தால் இனி ஒரு எலி கூட உங்க வீட்டுப்பக்கம் வராது!!