நமது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்று.இவை வேர்க்கடலையில் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது தவிர மேலும் சில ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வேர்க்கடலையை வைத்து சுவையான சட்னி செய்வது குறித்த விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள்:
**புரதம் **வைட்டமின்கள் **மெக்னீசியம் **தாமிரம் **பாஸ்பரஸ் **மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட்
புரதம் வாரி வழங்கும் வேர்க்கடலையில் சுவையான சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை – ஒரு கப்
2)பூண்டு பற்கள் – ஐந்து
3)புளி – ஒரு துண்டு
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)வர மிளகாய் – மூன்று
6)உப்பு – தேவையான அளவு
7)கறிவேப்பிலை – ஒரு கொத்து
8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
9)கடுகு – கால் தேக்கரண்டி
10)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கப் வேர்க்கடலையை வாணலி ஒன்றில் போட்டு வறுக்க வேண்டும்.பின்னர் இதை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம்,மூன்று வர மிளகாய் ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது அனைத்து பொருட்களையும் ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்சர் ஜார் எடுத்து வறுத்த வேர்கடலையை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு கொத்தமல்லி,சீரகம்,வர மிளகாய் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வெள்ளைப் பூண்டு பற்கள்,புளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள்.
பிறகு கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிவிட வேண்டும்.இதை வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து கொள்ளவும்.இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.