நமது அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பொருள் தான் பூண்டு. ஆரோக்கியம் தரக்கூடிய பொருளாகவும் இந்த பூண்டு திகழ்கிறது. இந்த பூண்டினை வைத்து பூண்டு நீர் ஒன்றினை செய்து குடிப்பதன் மூலம் பல விதமான நன்மைகள் நமது உடம்பில் ஏற்படும். இந்த பூண்டு நீர் எவ்வாறு தயார் செய்வது? எந்த நேரத்தில் இதனை குடிக்க வேண்டும்? இதனை குடிப்பதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பது குறித்த விளக்கத்தினை தற்போது காண்போம்.
பூண்டு நீர் செய்வதற்கு இரண்டு பல் பூண்டினை எடுத்து நன்றாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தட்டி வைத்த இந்த பூண்டினை பத்து நிமிடம் அப்படியே ஒரு கப்பில் போட்டு வைத்து விட வேண்டும். அந்த கப்பினை தட்டு வைத்து மூடி வைக்கக் கூடாது, திறந்த நிலையில் வைக்க வேண்டும். நாம் பூண்டினை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது பூண்டின் பற்களை ஒன்று நறுக்கி வைத்து சேர்ப்போம் அல்லது தட்டி வைத்து சேர்ப்போம்.இவ்வாறு இருக்கும் பொழுது அந்தப் பூண்டினை உடனே சமைக்க கூடாது. ஏனென்றால் உடனே அந்த பூண்டினை சமைக்கும் பொழுது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நமது உடம்பிற்கு செல்லாது.
இது மட்டுமல்லாமல் பூண்டினை ஒரு பத்து நிமிடம் காற்றோட்டமாக வைப்பதன் மூலம் இந்த பூண்டு காற்றுடன் வினைபுரிந்து ஒரு நல்ல விதமான வேதிபொருளை இந்த பூண்டு உற்பத்தி செய்யும். எனவே பத்து நிமிடம் கழித்து பூண்டினை சமைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நமது உடம்பிற்கு கிடைக்கும்.
இப்பொழுது பூண்டு தண்ணீர் செய்வதற்கு என பத்து நிமிடத்திற்கு முன்பாகவே எடுத்து வைத்திருந்த பூண்டினை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி மட்டும் வரும் வரையில் கொதிக்க விட வேண்டும். அதிக நேரம் பூண்டினை கொதிக்க விடக்கூடாது. இப்பொழுது அதனை வடிகட்டியும் குடிக்கலாம் அல்லது பூண்டுடன் சேர்த்தும் கொடுத்து வரலாம்.
இந்த பூண்டு தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவது மிகுந்த பலனை தரும். ஆனால் வாயு தொல்லை மற்றும் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பூண்டு தண்ணீரை தினமும் குடித்து வருவதன் மூலம் நமது ரத்தம் சுத்தம் செய்யப்படும். நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி விடும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பூண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. மாரடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்கவும் இந்த பூண்டு நீர் உதவுகிறது.
இதயம் மற்றும் நுரையீரலில் உள்ள உறுப்புகளை இந்த பூண்டு பலப்படுத்தும். காச நோய் மற்றும் குடற்புழுக்களையும் இந்த பூண்டு தண்ணீர் சரி செய்யும். புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் இந்த பூண்டு நீர் உதவுகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த பூண்டு தண்ணீரை எடுத்துக் கொள்வதன் மூலம் இன்சுலினின் அளவை சரியாக வைத்துக் கொள்ள முடியும். செரிமான பிரச்சனை மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் இந்த பூண்டு தண்ணீர் சரி செய்யும்.