தமிழக அரசிற்கு அண்ணாமலை முன்வைத்த முக்கிய கேள்வி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் நோய் தொற்று பரவல் காரணமாக, பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் கடன் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் நிதி நிலவரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கு முன்னர் தமிழகம் இவ்வளவு பெரிய ஒரு மோசமான நிலையை கண்டதில்லை இனிமேல் எதைச் செய்து இந்த கடனை தமிழக அரசு நடக்கப் போகின்றது என்ற கேள்விக்கு திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் பதில் தெரிவிக்கவில்லை. வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அடிப்படை வாக்குறுதிகளை நிறைவேற்ற கூற இயலாமல் போனதற்கு காரணம் அரசின் மோசமான நிதி நிலைமை என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு தங்களுடைய 100 நாள் சாதனை களை விவரித்து கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரிக்கைகளில் மிகப் பெரிய அளவில் செலவு செய்து முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் அண்ணாமலை.

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கும் தமிழக அரசு எதன் அடிப்படையில் பல கோடி ரூபாய் செலவில் மற்ற மாநிலங்களில் மற்ற மொழிகளில் முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Leave a Comment