Fingertips Peeling in tamil: உங்கள் விரலில் இப்படி இருக்கிறதா? இவ்வாறு வராமல் தடுப்பது எப்படி?

0
203
Fingertips Peeling in tamil

Fingertips Peeling in tamil: நமக்கு உடலில் ஏற்படும் பெரிய காயங்களால் உண்டாகக்கூடிய வலிகளை கூட தாங்கிக்கொள்ளலாம் போல ஆனால் சிறிய சிறிய வலிகளை நம்மால் தாங்கி கொள்ள முடிவதில்லை. இவைகள் தான் அதிக அளவு வலியை கொடுக்க கூடியதாக உள்ளது.

அதிலும் விரலின் நகத்திற்கு மேல் இந்த தோல் உரிவது நமக்கு அதிக வலியை ஏற்படுத்தும். அதிலும் உணவு சாப்பிடும் போது மிகவும் எரிச்சல் ஏற்படும். இந்த தோல் ஏன் இவ்வாறு உரிகிறது. இவ்வாறு தோல் உரியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நகங்களுக்கு அருகில் உள்ள தோல் உரிதல்

இது போன்று விரல் நகங்களுக்கு அருகில் பலருக்கும் தோல் உரியும். அது மிகவும் எரிச்சல் கலந்த வலியை நாள்தோறும் கொடுக்கும். சிலர் இதனால் அவர்களின் கை விரல் அழகு குறைகிறது என்று கருதுவார்கள். ஆனால் அதனையும் தாண்டி அதன் வழியாக பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பெரியவர்களுக்கு அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும், குழந்தைகள் கை விரல்களை வாயில் வைத்துக்காெள்ளும் போது கட்டாயம் தோல் உரிந்து அதில் பாக்டீரியாக்கள் உருவாகலாம்.

காரணம்

நகங்களை சுற்றி தோல் உரிவதற்கான முதல் காரணம் வறட்சியான தோல். வறட்சியினால் தான் தோல் உரிந்து எரிச்சல் கலந்த வலியை ஏற்படுத்துகிறது.

இரசாயண பொருட்களை பயன்படுத்துதல். இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் உங்கள் விரலின் தோல் ஏற்றுக்கொள்ளாது. குறிப்பாக துணி துவைக்கும் சோப், கைக்கழுவ பயன்படுத்தும் ஹாண்ட் வாஷ், வேறு ஏதாவது இரசாயனம் கலந்த பொருட்களை உங்கள் தோல் வறண்ட நிலையில் இருக்கும் போது பயன்படுத்தினால் இவ்வாறு ஏற்படும்.

மேலும் உங்கள் கைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் அது நகங்களை சுற்றி அழற்சியை ஏற்படுத்தி தோல் உரியும்.

காலநிலை மாற்றம் தோல் உரிவதற்கா காரணமாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது அதனால் தோல் வறட்சி அடைந்து தோல் உரியும். குளிர்காலத்தில் போதுமான அளவு வெப்பம் உடலுக்கு கிடைக்காததால் தோல் உரிய வாய்ப்புள்ளது.

காலநிலை மாற்றம் தோல் உரிவதற்கா காரணமாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது அதனால் தோல் வறட்சி அடைந்து தோல் உரியும். குளிர்காலத்தில் போதுமான அளவு வெப்பம் உடலுக்கு கிடைக்காததால் தோல் உரிய வாய்ப்புள்ளது.

மேலும் பெரியவர்கள் நகங்களை கடிப்பதாலும், குழந்தைகள் விரல் உறிஞ்சுவதாலும் நகத்தின் அருகில் இருக்கும் தோல் உரிகிறது.

அடுத்ததாக வைட்டமின் B3 (நியாசின்) மற்றும் வைட்டமின் B7 (பயோட்டின்) குறைபாட்டின் காரணமாக விரல் தோல் உரிகிறது. சரும செல்களுக்கு தேவையான நியாசின் உடலில் இல்லாதபட்சத்தில் இவ்வாறு ஏற்படும். மேலும் பயோட்டின் விரல் தோல் உரிவது, அழற்சி போன்றவற்றை ஏற்படுதும்.

தடுப்பது எப்படி?

  • வைட்டமின் B3, B7 உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
  • மேலும் அடிக்கடி சாேப்பு போட்டு கைக்கழுவ கூடாது.
  • ஒவ்வாமை ஏற்படுத்தும் எந்த இராசயன பொருட்களையும்
    பயன்படுத்த கூடாது.
  • தோல் வறட்சியாக உள்ள போது moisture பயன்படுத்தலாம்
  • தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க: நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!