நோய் தோற்ற பரவலின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக, பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழப்புகள் மற்றும் பிராணவாயு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்று பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டார்கள்.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மூன்றாவதாக வரவிருக்கும் நோய்த்தொற்று அலையை தவிர்க்கமுடியும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அறிவித்திருக்கின்ற விளக்கம் வருமாறு, அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் தான் நோய்த்தொற்று அலையின் மூன்றாவது பகுதியை நம்மால் தவிர்க்க இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.
நோய்த்தொற்றுகாரணமாக, சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தயாராக உள்ளது. அதைப்போல தனியார் மருத்துவமனைகளும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.