தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

0
129

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி 😕

 

நம் வாழ்வில் முக்கியமாக கருதப்படுவது ரேஷன் கார்டு ஆதார் கார்டு லைசென்ஸ் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற ஆவணங்கள் தான்.அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியமாகிறது .இருப்பினும் ஒரு சில பயணங்கள் நமது ஆவணங்களை தொலைத்து விட நேரிடும் .அதனை எப்படி திரும்ப மீட்டு எடுப்பது என்பதனை இப்பதிவில் காண்போம்.

1.மதிப்பெண் பட்டியல்

இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆவணங்கள் தர வேண்டும். மதிப்பெண் பட்டியல் நகல் ,பள்ளி மாற்றுச் சான்றிதழ் ,கட்டணம் செலுத்திய ரசீது போன்றவற்றை ஆவணமாக தரவேண்டும்.
இதற்கான கட்டணமாக உயர்நிலை பொது தேர்வு பத்தாம் வகுப்புக்கு ரூபாய். 105-யும் ,மேல்நிலைப்பொதுத்தேர்வு பட்டியல் ரு.505-யும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு அறுபது நாட்கள் ஆகும்.காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் வழங்கிய பிறகு முன் படித்த பள்ளி மற்றும் நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பம் வாங்கி அதை கையொப்பமிட்டு விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விபரங்கள் அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் கல்வி தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று அனுப்ப வேண்டும்.பட்டப்படிப்பு அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி துறைக்கு அனுப்ப வேண்டும்.

2.ரேஷன் கார்டு

இதற்கு கிராமப்புற வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர் ,நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கு காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு சான்றிதழ் அட்டையை வழங்க வேண்டும்.புதிய ரேஷன் கார்டு வாங்கும் பொழுது இதற்காக ரூபாய் 10 கட்ட வேண்டும்.

இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரங்கள் குறித்து கடிதம் தந்து அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.விசாரணைக்குப் பிறகு புதிய அட்டை 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.

3.டிரைவிங் லைசென்ஸ்

இதற்கு மாவட்டப் போக்குவரத்து அதிகாரி அவர்களை அணுக வேண்டும்.இதற்காக பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் வேண்டும்.இதற்கான கட்டணம் ரூபாய்.315 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம் ஆகும்.காவல் துறையில் புகார் தெரிவித்து அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகே மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்

4.பான் கார்டு

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறையினரிடம் அணுக வேண்டும். இதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்று நகல் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூபாய்.96 வசூலிக்கப்படும். விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள் தேவைப்படும். பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

5.டெபிட் கார்டு

இதற்கு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் அவர்களை அணுக வேண்டும். இதற்கு ஆவணமாக கணக்குத் தொடர்பான விவரங்கள் அளிக்க வேண்டும்.இதற்கு கட்டணமாக ரூபாய்.100 வழங்க வேண்டும்.

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்களில் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள் தேவைப்படும்.
முதலில் டெபிட் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிவர்த்தனை நடக்காதவாறு தடுக்க வேண்டும்.பிறகு சம்பந்தப்பட்ட கிளையில் மேலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கூற வேண்டும்.

6.கிரெடிட் கார்டு

முதலில் கிரேட் கார்ட் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிவர்த்தனையை நிறுத்தவேண்டும். இதற்கு நிர்வாகத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை முதலில் அணுகவேண்டும். தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விபரங்களை தர வேண்டும் இதற்காக ரூபாய்.100 வசூலிக்கப்படும். இது 15 நாட்கள் ஆகலாம்.

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக அடையாள சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

7.கிரைய பத்திரம்

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர் அவர்களை அணுக வேண்டும். இதற்கு காவல்துறையினரிடம் கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்காக ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள் ஆகியவற்றை பெற வேண்டும்.
இதற்கு கட்டணம் ரூபாய். 100 வசூலிக்கப்படும்.இதற்குப் பிறகு கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் 20 செலுத்த வேண்டும்.

இது ஒரு சில நாட்களில் கிடைத்துவிடும்.பத்திரம் தொலைந்த உடன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும் .தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும் .இதற்கு பிறகு பதிவாளர் அலுவலகம் சென்று அணுக வேண்டும்.

8.மனை பட்டா

இதற்கு வட்டாட்சியர்கள் அணுக வேண்டும். இதற்காக நகல் பட்டா விண்ணப்பம் தேவைப்படும். இதற்காக ரூபாய் 20 வசூலிக்கப்படும் .இது ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
முதலில் தாசில்தாரிடம் மனுந்து அவர்களின் பரிந்துரையின் கீழ் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் பெற்று பின், தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பட்டா கிடைக்க அணுக வேண்டும்

9.பாஸ்போர்ட்

இதற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் அளவு அணுகவேண்டும். காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல் ,20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம் தர வேண்டும். இதற்காக கட்டணம் ரூபாய்.4000 வசூலிக்கப்படும்.
பாஸ்போர்ட் தொலைந்து இருந்தால் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்க இயலும். வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்காக முதலில் பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்க வில்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் .பின்பு 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைப்பார்கள்.

 

10.இன்ஷூரன்ஸ் பாலிசி

பாலிசியை விநியோகம் செய்த கிளையை முதலில் அணுக வேண்டும் .இதற்காக முகவரிச் சான்று புகைப்பட அடையாளச் சான்றின் நகல் பொதுமக்களிடம் இடம் பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் அளிக்க வேண்டும். இதற்காக கட்டணமாக ரூபாய். 75 கட்ட வேண்டும். இது தவிர கவரேஜ் தொகையை ரூபாய்.20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும் .நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொடர்ந்து தொலைந்து போனதற்கான காரணத்தை பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

இதனை முறையாக செய்து ஆவணங்களை மீட்டெடுக்க இயலும்.

Previous articleகொரோனா தொற்றுக்கு தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடாவா? உயர் நீதிமன்றம் விளாசல்
Next articleசினிமா ஷூட்டிங் தொடங்கலாம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!