அடிக்கடி தலைவலியா:? அடகவலை வேண்டாங்க! ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிச்சா தலைவலி நொடியில் சரியாகிவிடும்!

Photo of author

By Pavithra

அடிக்கடி தலைவலியா:? அடகவலை வேண்டாங்க! ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிச்சா தலைவலி நொடியில் சரியாகிவிடும்!

Pavithra

நம் உடல் 60 சதவீதம் நீரால் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.தண்ணீரை சரியான அளவு முறையாக குடித்தால்,உடலில் உள்ள பலவிதமான நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.

ஆனால் தண்ணீரை சூடுபடுத்தி குடித்தால் தான் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நம்மை விட்டு ஓடும்.சுடுநீர் குடிப்பதினால் நம் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்களை பற்றி நாம் இதில் காண்போம்.

நமது வாழ்க்கை முறை மற்றும் உடலின் தேவைகளைப் பொறுத்து தினமும் 11 முதல் 16 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சூடான நீரை குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள்!

* உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஒரு டம்ளர் சூடான தண்ணீரை குடித்தாலே போதுமானது.

* எவ்வளவு கடினமான உணவுகளை சாப்பிட்டாலும் ஒரு டம்ளர் சுடு நீரை குடித்தால் எளிதில் ஜீரணம் அடைந்து விடும்.

* உடல் கொழுப்பை கரைக்க சுடுநீர் பெரிதும் உதவுகின்றது.

* நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு சூடான நீர் அருமருந்தாக பயன்படுகிறது.

* மாதவிடாய் நேரங்களில் பெண்கள் சுடு நீரைக் குடிப்பதனால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் சோர்வு வயிற்று வலியும் உடனடியாக குணப்படுத்துகின்றது.

* ஒற்றை தலைவலி அல்லது பிற தலைவலி பிரச்சினைகளுக்கு,
தலைவலிக்கும் நேரத்தில் சிறிதளவு சூடான நீரை குடித்து கண்களை மூடி 2 நிமிடம் உட்கார்ந்திருந்தால் போதும்.தலைவலி நொடியில் காணாமல் போய்விடும்.

* உடல் எடையை குறைக்க நாம் உணவு உண்ட பின்பு சிறிதளவு சுடு நீரை குடித்தால் ஜீரண எளிதில் நடந்து கொழுப்புகள் உங்கள் உடலில் சேர்வதை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவும்.

* அதுமட்டுமின்றி வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் தோல் செல்களை சரிசெய்து புத்துணர்ச்சியை அதிகரிப்பதோடு உடலையும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றது.