வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க வேண்டுமா? அதற்கு பன்னீர் மட்டும் போதும்!

0
128

நாம் சில சமயங்களில் நம்முடைய வாயை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் முந்தைய நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் துகள்கள் நம்முடைய வாயில் தங்கி கிருமிகளாக மாறி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த துர்நாற்றம் நமக்கு மிகவும் மோசமான அனுபவத்தை தரக்கூடும். எனவே வாயில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றத்தை பன்னீர் வைத்து சரி செய்யலாம். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* பன்னீர்
* எலுமிச்சை சாறு

செய்முறை…

பன்னீர் என்றால் வெண்ணெய் நெய் அது போன்ற பன்னீர் கிடையாது. தண்ணீர் வடிவில் இருக்கும் பன்னீர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பன்னீரை ஒரு டம்ளரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை வைத்து நாம் வாய் கொப்பளிக்க வேண்டும். தொடர்ந்து இது போல வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். அதே போல வாயில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றமும் நீங்கும்.