Nail biting in Tamil: நகம் நடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இந்த நோயை பற்றி தெரியுமா?

Photo of author

By Priya

Nail biting in Tamil: நம்மில் பலருக்கும் இந்த நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக இந்த நகம் கடிக்கும் போது நாம் வேண்டும் என்றே செய்வது இல்லை. நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருக்கும் போது நம்மையும் அறியாமல் இது போன்று நாம் செய்துவிடுகிறோம். இந்த பழக்கம் அதிகமாக குழந்தைகளிடம் காணப்படும். ஒரு சில குழந்தைகள் எப்போதும் நகங்களை கடித்துக்கொண்டு இருப்பார்கள். இதனை பெற்றோர்கள் காணும் போது கோபத்துடன் குழந்தைகளை சில சமயம் அடித்துவிடுவார்கள்.

ஆனால் இந்த பழக்கம் பெரியவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பலருக்கும் நகம் கடிப்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் நகம் கடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிவதில்லை. நாம் இந்த பதிவில் நகம் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள், எப்படி தடுக்கலாம். மேலும் குழந்தைகள் நகம் கடித்தால் என்ன செய்வது போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.

நகம் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள் – Side Effects of Nail Biting 

நகம் கடித்துக்கொண்டிருப்பதால் நகத்தில் உள்ள அழுக்குகள் கட்டாயம் நம் உடலுக்குள் சென்று வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஒருவரின் விரல் நகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு நோய் உள்ளதா என கட்டாயம் கண்டறிய முடியும். அவ்வாறு இருக்கையில் நகத்தை நீங்கள் கடித்தால் அதனால் நோய்கள் கட்டாயம் ஏற்படும்.

ஒரு சிலர் நகத்தை கடித்து துப்பாமல், என்ன செய்கிறோம் என்று தெரியாமல், கடித்த நகத்தையும் சேர்த்து மென்றுவிடுவார்கள். இது வயிற்றுக்குள் சென்று வயிற்று வலியை ஏற்படுத்தும்.

தொடர்ந்து நகம் கடித்து வந்தால் விரல்களில் நகம் வளர்ச்சி தேவைப்படும் செல்கள் இறந்து அதனால் நகம் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, விரல்களில் உள்ள நகம் விழுந்துவிடக் கூடிய நிலை ஏற்படும்.

நகத்தை கடிப்பதால் நகத்தில் உள்ள கொடுரமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வெளியில் இருந்து வரக்கூடிய தீய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படாமல் நமது உள்ளுறுப்புகளை செயலழிக்க செய்து விடும்.

நகம் கடிப்பதற்கான காரணம்

நகம் கடிப்பதற்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளால் வரலாம். இது நீங்கள் ஒரு இடத்தில் தனியாக இருந்தால் அப்பொழுது நீங்கள் நகத்தை கடித்துக்கொண்டிருக்கலாம்.

ஒருவருக்கு ஒரு செயல் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத போது அல்லது என்ன நடந்துவிடுமோ என்ற பயம் வரும் போது நகத்தை கடிப்பார்கள்.

முக்கியமாக தனிமையில், மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இந்த நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் ஒரு கடினமாக சூழ்நிலையில் நீங்கள் வேலை செய்யும் போது, அதனை நீங்கள் எதிர்க்கொள்ள தயாராக இல்லை நிலையிலும், அதே சமயம் நீங்கள் செய்த செயலுக்காக உங்களை விமர்சிக்கும் போது இந்த பழக்கம் நம்மை அறியாமல் செய்துவிடுகிறோம்.

குழந்தைகளும் ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் போது அல்லது அவர்கள் செய்த செயலுக்கு யாரேனும் திட்டிவிடுவார்களா? என்ற பயத்தில் இருக்கும் போது நகம் கடிப்பதை செய்கிறார்கள்.

தடுப்பது எப்படி?

முதலில் நீங்கள் எந்த சூழ்நிலை ஏற்படும் போது இவ்வாறு செய்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும். மீண்டும் அந்த சூழ்நிலை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் நகம் கடிப்பதை (How to Stop Nail Biting in Tamil) தவிர்த்து அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்யலாம். உதாரணமாக அந்த சமயம் நகத்திற்கு நெயில் பாஸிஷ் அடிக்கலாம்.

பிறகு தொலைக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து கொள்ளலாம். ஏதாவது வேலை செய்யலாம். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். அல்லது ஏதாவது பாெருட்களை துடைக்கலாம். அப்போது கை அழுக்காக இருப்பதால் நகம் கடிக்கும் எண்ணம் தோன்றாது.

குழந்தைகள் நகத்தை கடித்தால் அவர்களை திட்டாமல் பொறுமையாக முதலில் சொல்ல வேண்டும். நகம் கடிக்கும் சமயத்தில் ஓவியம் வரைய சொல்லலாம். அவர்களை இதனை தொடர்ந்து செய்து வந்தால் நகத்தில் கசப்பான வேப்ப எண்ணெய் தடவி விடலாம்.

மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் HB அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!