பிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..!
நாம் எவ்வித நல்ல காரியங்களை தொடங்கினாலும், முதலில் முழு முதல் கடவுளான பிள்ளையாரை வணங்கியப் பின்னர்தான், எவ்வித காரியத்தையும் தொடங்குவோம். அவ்வாறு அவரை எந்த திசையில் வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்…
பிள்ளையார் வழிபாடு சிறந்த பலனை தரும். பிள்லையார் தும்பிக்கையானது எப்போது இடது புறமுள்ள அவரின் தாயார் கெளரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பிள்ளையாரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே பிள்ளையாரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
பிள்ளையாரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது. கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும். வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் பிள்ளையாரை வைக்கக்கூடாது. ஏனெனில் அது துன்பத்தை ஏற்படுத்தும்.
உலோகத்தில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வழிபடவேண்டும். அதிலும், அவரை வடகிழக்கு மூலையில் வைத்து வணங்கினால், சகல செல்வங்கள் நமக்கு வந்து சேரும்.
தினந்தோறும் சொல்லவேண்டிய மந்திரம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடி *கணபதி* வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.