கிருமிகளை தானாகவே அழிக்கும் அதி நவீன முககவசம்!

0
118

ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிப்பில் முன்னணியிலிருக்கும் ஹூவாமி / அமேச் ஃபிட் (HUAMI / AMAZFIT).

2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் N95 முக கவச வழிகாட்டுதலுடன் அதி நவீன முககவசங்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aeri (ஏரி) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த முககவசங்களில் பொருத்தப்பட்டிருக்கும் புற ஊதா விளக்குகள் (Ultra Violet Lights) கிருமிகளை அழித்துவிடும் என கூறப்படுகிறது. USB மூலம் சார்ஜ் செய்யும் வசதியுடைய இந்த முகக் கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபில்ட்டர்களை கழட்டி சுத்தப்படுத்த முடியுமாம். ஒளி ஊடுருவும் (Transparent) வகையில் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் நீண்ட நாட்கள் உழைக்கும் பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

முகத்தை அடையாளம் காணும் (Face Recognition) அம்சத்தை தங்கள் அலைபேசியில் வைத்திருக்கும் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் அலைபேசி பயனர்கள், Aeri முகக்கவசத்தை அணிந்து அவர்கள் அலைபேசியை இயக்க முற்பட்டால் கூட அவர்களின் அலைபேசி அவர்களின் முகத்தை அங்கீகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஹூவாமி நிறுவனம் புதிய முகக்கவசத்தை சீன அரசாங்கத்தின் மூத்த மருத்துவ ஆலோசகருடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. தற்போது இந்த முககவசத்தை பரிசோதனை செய்து வரும் இந்நிறுவனம் விரைவில் வாடிக்கையாளர்களை கவரும் விலையில் இதனை அறிமுகப்படுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleஎமனாக மாறிய ‘பப்ஜி’ – மாரடைப்பால் உயிரிழந்த தமிழக மாணவர்
Next articleஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு – நிபந்தனைகளை இறுதி செய்த தமிழக அரசு