விண்வெளியில் நெற்பயிர் அமோக விளைச்சல் ! விஞ்ஞானிகள் செய்த சாதனை!
கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில் ,பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில் நெற்பயிர் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மேலும் இதற்கான முயற்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
இந்நிலையில் இதற்கான தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினார்கள். இதனைதொடர்ந்து தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த விதை நான்கு இலைகளை உற்பத்தி செய்தது. இதனையடுத்து அவை அரிசி விதையானது முப்பது சென்டி மீட்டர் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. அதனை கண்ட விஞ்ஞானிகள் வியப்பில் உள்ளனர்.