கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் ,ஆன்லைன் வகுப்பு கவனிக்க செல்போனை அவனது பெற்றோர்களிடம் கேட்டான். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதால் அச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பல மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்கி தரக்கோரியுள்ளனர்.பெற்றோர் மறுப்பதால் மாணவர்கள் மன உளைச்சலாலும்,தாழ்வுமனப்பான்மையாலும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து குற்றச்சாட்டு வந்துள்ளது.
இந்த ஆன்லைன் கல்வித்திட்டத்திற்கு எதிராக பலருமுள்ள நிலையில், தற்பொழுது தேசிய மனித உரிமை ஆணையமும் இதனை தடுக்க முன்வந்துள்ளது.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.