100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

Photo of author

By CineDesk

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

வேல்ஸ் என்ற நாட்டில் உள்ள ஒரே ஒரு சாலையில் மட்டும் நூற்றுக்கணக்கான பறவைகள் திடீர் திடீரென மயங்கி செத்துக் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. வேல்ஸ் நாட்டில் வெல்ஸ் என்ற நகரில் ஒரே ஒரு சாலையில் மட்டுமே நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடந்தாகவும் அதற்கு அடுத்த சாலையில் எந்த ஒரு பறவையின் சாகாமல் இருந்ததாகவும் அந்த ஒரு சாலையில் மட்டும் பறவைகள் செத்து கிடந்ததன் மர்மம் என்ன என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

பறவைகளின் உடலை ஆய்வு செய்த பின்னர் தான் இதற்கான காரணம் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர் என்றாலும் அந்த சாலையில் பறவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அது மட்டுமின்றி பறவைகள் சாவதற்கு அமானுஷ்ய சக்தியும் காரணம் என்று ஒரு வதந்தியும் மிக வேகமாக பரவி வருகிறது.

தற்போது சாலையில் செத்து விழுந்த பறவைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த ஒரு சாலையில் மட்டும் பறவைகள் நூற்றுக்கணக்கில் இறந்ததை அடுத்து அந்த சாலையில் மக்களும் பயணம் செய்ய பீதி அடைவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘மனிதர்களுக்கு இந்த சாலைகள் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் எனவே தாராளமாக பயணம் செய்யலாம் என்றும் கூறி வருகின்றனர். இதுகுறித்து ஒரு தனியார் ஊடகமும் தனியாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.