வேட்டையன் வசூல் பின்னடைவு!! ரஜினிகாந்திற்கு செக் வைத்த லைக்கா நிறுவனம்!!

0
321
Hunter collection lag!! Leica sent a check to Rajinikanth!!
Hunter collection lag!! Leica sent a check to Rajinikanth!!

இந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி ஞானவேல் இயக்கி,  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையன்”. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்,  லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.  இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அப்போது நீண்ட உரையாடல் நடைபெற்றது. ரஜினிகாந்த் ஏற்கனவே ஹிந்தி தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. மேலும் வேல்ஸ் ஐசிரி கணேஷ் தயாரிப்பின் கீழ் திரைப்படம் நடிக்கபோவதகவும் தகவல்கள் வெளியான நிலையில் லைக்கா நிறுவனம் மேலும் எங்களுக்கு ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இதற்கு முன் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2018 ம் ஆண்டு அது வரை இல்லாத மிக பெரிய பொருட் செலவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 திரைப்படம் எடுக்கப்பட்டது ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் இந்திரைப்படம் சரியாகபோகவில்லை. இதனை தொடர்ந்து  2020 ம் ஆண்டு இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வெளியானது இதுவும் சரியாக போகவில்லை.  இந்த இரண்டு திரைப்படங்களும் லைக்கா நிறுவனம் எதிர் பார்த்த அளவிற்கு வசூலை தரவில்லை நஷ்டத்தில் முடிந்தது.

 தற்போது வெளியான வேட்டையன் திரைப்படத்தில் சம்பளம் மற்ற படங்களை விட குறைவாக வாங்கி நடித்து கொடுத்ததாகவும், ஆனால் இந்த திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று  எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை எனவே நீங்கள் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தினை எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில்  நடிக்க வேண்டும் என கேட்டுள்ளது .இதற்கு என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்தில் ஆழ்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்!  மீண்டும் குறைவான சம்பளம் பெற்று லைக்கா நிறுவனத்திற்கு நடித்து கொடுப்பாரா??

Previous articleமர்மமான பக்தர்கள்.. ஈஷா மையத்தில் தகன மேடை!! போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
Next articleரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்!! இனி வரும் நாட்களில் இதை வாங்க மறந்துவிடாதீர்கள்!!