வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!

Photo of author

By Sakthi

வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!

Sakthi

Updated on:

 

வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்…

 

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம்(Firstlook) நாளை அதாவது ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சந்திரமுகி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் 2 பாகத்தை தற்பொழுது இயக்குநர் பி வாசு எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம் கீராவாணி இசையமைக்க லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

இந்நிலையில் சந்திரமுகி 2 படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

 

சந்திரமுகி 2 படக்குழு கொடுத்த அப்டேட்டின்படி நாளை காலை அதாவது ஜூலை 31ம் தேதி காலை 11 மணி அளவில் சந்திரமுகி 2 படத்தில் இருக்கும் முக்கிய கதாப்பாத்திரமான ‘வேட்டையன்’ கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.