தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Photo of author

By Rupa

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கோடைகாலம் வரும் முன்னே தமிழகத்தில் கடும் வெயில் நிலவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் திடிக்கிடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறுவது,வடமேற்கில் இருந்து தரைகாற்று வீசுவதால் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளனர்.

அதனால் மக்கள் அனைரும் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை அளித்துள்ளனர்.வானிலை ஆய்வு மையம் கூறியது,ஏப்ரல் 7ஆம் தேதி வரை சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,வேலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 லில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.மேலும் வருகிற ஏப்ரல் 6 ஆம் அன்று கரூர்,தருமபுரி,சேலம்,நாமக்கல்,உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4ல் இருந்து 5டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனக் கூறியுள்ளனர்.

சென்னை,காஞ்சுபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர்,தஞ்சை,திருவாரூர்,மயிலாடுதுறை,நாகை,சிவகங்கை,புதுக்கோட்டை,வேலூர்,ராணிப்பேட்டை,சேலம்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இயல்பு நிலையை விட வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி,பெரம்பாலூர்,அரியாலூர்,மதுரை,விருதுநகர்,ஆகிய மாவட்டங்களில் 6 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் உயரும் எனக் கூறியுள்ளனர்.

இந்த வெப்ப சலனத்தால் அடுத்த 4 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளதால் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும்.மன்னார்வளைகுடாவில் 60 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மக்கள் அனிவரும் அவர்கள் கூறிய நேரத்தில் வீட்டினுள்ளே இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.