உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!
பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் என்ற போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
கடலூர் வண்ணாரபாளையத்தில் ஜோஷி என்ற பூனை காணாமல் போயுள்ளது.இதனால் வேதனை அடைந்த பூனையின் உரிமையாளர் ஜோஷி என்ற தங்களது பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அதன் அடையாளங்களை குறிப்பிட்டும் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில் பூனையின் புகைப்படத்தை சேர்த்த இவர் அதன் அங்கு அடையாளங்களை குறிப்பிட்டுள்ளார்.ஆண் பூனை,பூனையின் பெயர் ஜோஷி,இதன் வயது 3, பூனையின் நிறம் வெள்ளை,தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் சந்தன நிறம் இருக்கும்.போன்றவற்றை அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது இந்த போஸ்டர் வெகு வைரலாகி வருகிறது.