பெண் கொலை சம்பவத்தில் கணவர் கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தில் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் வசித்து வந்தனர். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்கள்.
அவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு வழக்கம் போல் திங்கக்கிழமை மாலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மாரியப்பன் கோவம் தாங்க முடியாமல் மாரியம்மாளை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாரியப்பன் கையில் கிடைத்ததை வைத்து மனைவியை தாக்கியுள்ளான். இதனால் மாரியம்மாள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் பலத்த காயம் அடைந்ததாகவும் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அவரை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் உயிரில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்கள்.
இது குறித்து ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் போலீஸ் மாரியப்பன் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.