மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37),இவர்  வீடுகளுக்கு சென்று பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மலர்மதி (35). இந்த தம்பதிகளுக்கு  2 மகள்கள் உள்ளனர்.மேலும் ராஜா குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர்.இவர் பல ஆண்டுகளாக குடித்து வருவதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மருந்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில்  மருத்துவர், ராஜா இனி குடிக்க கூடாது என்று  கூறியுள்ளார். மருத்துவர் கூறியதை கேட்டு  கடந்த 3 மாதங்களாக ராஜா குடிக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடிரென்று ராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவர் குடித்து வந்ததையடுத்து அவருடைய மனைவி மலர்மதி கோபித்துக்கொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ராஜா, வீட்டில் யாரும் இல்லாத போது  சேலையால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு இடையே அதிர்ச்சியை எற்படுதிவுள்ளது. இது  குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Comment